7

முல்லா நசுரூதீனின் கதை ஒன்று………………..

அவர் ஈரானில் பிறந்தவர், அவரது கல்லறை இன்னும் ஈரானில் உள்ளது. இந்த முழு உலகத்திலும் இல்லாத புது விதமான தனித்துவமான வித்தியாசமான கல்லறை அது. கோடிகணக்கான கல்லறைகள் இருந்தாலும் முல்லா நசுரூதீனின் கல்லறை போல எதுவும் கிடையாது. கல்லறை மீது ஒரு பெரிய பூட்டுடன் கதவு ஒன்று நிற்கிறது. அந்த பூட்டு……. முல்லா தான் சாகும் முன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். “நீங்கள் அந்த பூட்டின் சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள், அப்போதுதான் யாரும் இந்த கதவை திறக்க முடியாது.” சக்ரவர்த்தி வந்து கூட பார்த்து விட்டு, “என்ன மடத்தனம் இது,  இவரை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தோமே, கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு என்றாலும் எல்லோராலும் இவர் நேசிக்கப்பட்டாரே” என்று கேட்டார்.

நசுரூதீனின் முக்கிய சீடர்களைப் பார்த்து சக்ரவர்த்திக் கேட்டார், “என்ன விஷயம்?” அவர்கள், “இது புதிதல்ல. அவர் எங்கு சென்றாலும் இந்த கதவை தூக்கிக் கொண்டு செல்வார். நாங்கள் அவரை ஏன் என்று கேட்டோம். அவர், நான் கதவை என்னுடன் தூக்கிக் கொண்டு சென்று விட்டால் யாரும் என் வீட்டினுள் நுழைய முடியாது. எல்லோரும் கதவின் வழியாகத்தான் வீட்டினுள் நுழைந்தாக வேண்டும். வீட்டைக் காப்பாற்றுவதற்காக நான் இந்த கதவை என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என்பார்.

இறப்பதற்கு முன் அவர், இந்த கதவை என்னுடைய கல்லறை மீது பொருத்தி பூட்டி விடுங்கள். சாவியை என்னுடன் புதைத்து விடுங்கள். எப்போது நான் சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்பினாலும் நான் கதவை திறந்து வெளியே வர முடியும் என்றார்”. என்றனர்.

சக்ரவர்த்தி என்ன முட்டாள்தனம் என்று கூறினார். ஆனால் அவரும் முல்லாவை விரும்பினார்.

முக்கிய சீடர் கூறினார், “அதில் ஒரு விஷயம் இருக்கிறது. அவர் நான் இறந்து விட்டேன் என்று நினைக்காதீர்கள். என்னுடைய உடலைத்தான் நீங்கள் கல்லறையினுள் வைத்திருக்கிறீர்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வு அழிவற்றது என்றார்.”

ஆனால் அவர் எப்போதும் சிறிது கிறுக்கனாகத்தான் இருப்பார். வாழ்வு அழிவற்றது என்னும் இந்த கூற்றை நிரூபிக்கத்தான் அவர் கதவை கல்லறை மீது வைத்தார். “நான் வெளியே வர விரும்பினால் எந்த கணமும் என்னிடம் சாவி இருந்தால் நான் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கதவை திறந்து வெளியே வந்து நகரைச் சுற்றி சிறிது உலா வரலாம். உங்களால் என்னை பார்க்க முடியாது, ஆனால் நான் உங்களை பார்க்கலாம்.”

ஒரு முறை ஈரான் சக்ரவர்த்தி சார்பாக பெரும் பரிசுகளுடன் இந்திய சக்ரவர்த்தியை சந்திக்க முல்லாநசுரூதீன் அனுப்பப் பட்டார். முல்லா இந்திய சக்ரவர்த்தியை முழு நிலவு என புகழ்ந்தார். முல்லாவின் எதிரிகள் இந்த சேதியை கேள்விப்பட்டு அரசரிடம், “நீங்கள் அனுப்பிய ஆள் சரியில்லை. அவர் இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து இருக்கிறார்.” என்று குற்றஞ்சாட்டினர். சக்ரவர்த்தி, “அவர் வரட்டும், அவர் இதற்கு சரியான பதில் கூற வேண்டும், இல்லாவிடில் அவர் தனது தலையை இழக்க நேரிடும்.” என்றார். முல்லா நசுரூதீன் திரும்பி வந்தார். இந்திய அரசர் அவர் புகழ்ந்து கூறியதில் மிகவும் மகிழ்ந்து பல பரிசுகளை அளித்திருந்தார். அதை பார்த்த ஈரானின் அரசர் மிகவும் ஆத்திரமடைந்து, “நசுரூதீன், உனது வாழ்வே மிகவும் அபாயத்தில் இருக்கிறது.” என்றார்.

நசுரூதீன், “ஒவ்வொருவருடைய வாழ்வும் அபாயத்தில்தான் இருக்கிறது. உங்கள் வாழ்வு அபாயத்தில் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சக்ரவர்த்தி, “தத்துவம் பேசாதே. நீ பதில் சொல்ல வேண்டும். நீ இந்திய அரசரை முழு நிலவு என்று புகழ்ந்து கூறியிருக்கிறாய். அது என்னை அவமரியாதை செய்வதாகும்.” என்று கூறினார்.

நசுரூதீன், “நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் அதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் வளரும் நிலா, ஒரு சிறிய பிறை போல இருப்பது சில நாட்கள்தான். பின் முழு நிலவாக மலரும். முழு நிலவு என்றால் தேயும் நாட்கள் வந்து விட்டன. அந்த இந்திய அரசர் ஒரு முட்டாள். அவர் நான் அவரை புகழ்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் அவரிடம் உங்களது நேரம் முடிந்து விட்டது. இனிமேல் வளர்ச்சி இல்லை. இனிமேல் தேயும் காலம்தான் என்று கூறினேன். ஆத்திரப்படும் நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் வளரும் நிலா. நீங்கள் இன்னும் வெற்றியடைய வேண்டும். பெருக வேண்டும். நீங்கள் முழு நிலவாக மாற இன்னும் காலமிருக்கிறது” என்றார்.

சக்ரவர்த்தி இந்த விளக்கத்தால் மிகவும் மகிழ்ந்தார். நசுரூதானின் எதிரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இவர் இப்படி ஒரு விளக்கமளிக்கக் கூடும் என்று எதிர் பார்க்கவேயில்லை. யாரும் இப்படி நினைக்கவில்லை. அவர் எல்லோரும் முல்லா அரசரை அவமதித்துவிட்டதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

நசுரூதீன் ஒரு சூபி ஞானி. ஒரு சிறிது கிறுக்குத்தனம் பிடித்தவர். ஆனால் மிகவும் புத்திசாலித்தனம் படைத்தவர்.

ஒரு நாள் அவர் அந்த நகருக்கு வந்திருந்த அரிதான ஓவியங்கள் கண்காட்சியை காண தனது சீடர்களுடன் சென்றார். இங்கு விஷயம்

என்னவென்றால் அவர் தனது கழுதையின் மீது சவாரி செய்ய வேண்டும். அவர் தனது சீடர்களிடம், “இப்போது என்ன செய்வது? நான் எனது கழுதையின் மீது வழக்கமான முறையில் அமர்ந்து சவாரி செய்தால் அப்போது எனது முதுகைத்தான் நீங்கள் பார்க்க முடியும். அது அவமரியாதையாகும். என்னால் எனது சீடர்களை அவமதிக்க முடியாது. நீங்கள் முன்னாடி நடந்தால் உங்களது முதுகுதான் என்னை நோக்கி இருக்கும். நீங்கள் அது போல என்னை அவமதிப்பீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே நான் கழுதை மீது உங்களை நோக்கியவாறு அமர்ந்து செல்வது ஒன்றுதான் சாத்தியமான ஒன்றாக தெரிகிறது” என்றார்.

சீடர்கள், “ஆனால் இந்த நகரம் முழுவதும் அதை பார்த்து சிரிக்குமே!. நீங்கள்

எங்களையும் முட்டாள்கள் போல தோன்ற செய்கிறீர்கள். ஆனால் இதிலும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்களுடன் எங்கு சென்றாலும் தொந்தரவுதான்”. என்றனர்.

இந்த ஊர்வலம் நகரம் முழுவதும் சென்றது. எல்லோரும் பார்த்தனர். இது என்ன புது மாதிரியாக இருக்கிறது. யாரும் இது போல கழுதை மீது பின்புறமாக அமர்ந்து போனதை பார்த்ததேயில்லை. இறுதியில் ஒரு கூட்டம் கூடி, “எங்களுக்கு இது போல அமர்ந்து போவது ஏன் என்று தெரியும்வரை நாங்கள் உங்களை போக விட மாட்டோம்.” என்றனர்.

நசுரூதீன், “விளக்கம் எளியது. நான் எனது சீடர்களை அவமதிக்க விரும்பவில்லை எனவே எனது முதுகை அவர்களுக்கு நான் காண்பிக்க முடியாது. எனது சீடர்கள் என்னை அவமதிப்பதை நான் விரும்பவில்லை. எனவே அவர்கள் எனக்கு முதுகை காண்பித்தபடி எனக்கு முன்னால் நடக்க முடியாது. எனக்கு பின்னால்தான் அவர்கள் நடந்தாக வேண்டும். இப்போது என்ன செய்வதென்று நீங்கள் சொல்லுங்கள். இதை எப்படி சமாளிப்பது? இது ஒன்றுதான் வழி.”என்றார்.

மக்கள், “இது பைத்தியகாரத்தனமாக இருக்கிறது. ஆனால் இது ஒன்றுதான் வழி. உன் முதுகை பார்ப்பது யாருக்காவது அவமரியாதையாகிறது எனும்போது இது ஒன்றுதான் வழி. ஆதலால் நிச்சியமாக நீங்கள் செய்வது சரியானதுதான்.” என்றனர்.

ஒரு சாதாரண மனிதன் நிச்சலனமாக இருக்கும்போது அவனது ஒவ்வொரு செயலும் முழுமையான தெளிவோடு இருக்கும், ஆனால் மேல்மட்டத்தில் அது கோமாளித் தனமானதாக தோன்றலாம். அவர் போதிதர்மர், மஹாகாஸியப் போன்றவர்கள் வரிசையில் இருப்பவரே. ஆனால் அவர் அவர்கள் எல்லோரையும் விட ஒரு சிறிது அதிக கிறுக்குத்தனம் உள்ளவராக இருக்கிறார்.

நிச்சலனமான இதயத்தில் இருந்து வெளிவருபவை யாவும் புத்திசாலித்தனம் போல மக்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது அவசியம் கிடையாது. அவை உனக்கு பொருந்தினால் போதும், யார் உன்னை புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் உன்னுடன் பொருந்தி இருப்பார்கள். ஆனால் இந்த உலகில் நிச்சலனமான இதயத்தின் தெளிவை புரிந்து கொள்ளும் மக்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகவும் கஷ்டமானதாகவும் இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் பிரச்னையில்லை. நிச்சலனமான இதயத்திற்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை. அவர் தன்னுள் நிறைவடைந்து இருப்பதால் அது வெளிஉலகிற்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம், ஆனால் அது அவரது இயல்பிலிருந்து வெளிவந்தால் அதைப் பற்றிய அக்கறை பட வேண்டிய அவசியம் இல்லை.

அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அது பொய்யானதாகவோ, போலியானதாகவோ, பாசாங்கு செய்வதாகவோ இருக்கக் கூடாது. அது உனது நிச்சலனமான இதயத்திலிருந்து வெளிவருவதாக இருக்க வேண்டும். பின் மக்கள் அதை அங்கீகாரம் செய்கிறார்களோ இல்லையோ செய்யும் ஒவ்வொன்றும் தெளிவானதாக இருக்கும்.

எத்தனை பேர் முல்லா நசுரூதீனை அங்கீகரித்தார்கள்? மிகவும் சிலரே. எத்தனை பேர் போதிதர்மரை அங்கீகரித்தார்கள்? மிகச் சிலரே. எத்தனை பேர் மஹாகாஷ்யபர் திடீரென சிரித்தவுடன் அங்கீகரித்தார்கள்? கௌதமபுத்தர் மட்டுமே. பத்தாயிரம் புத்த பிக்குகள் அங்கு கூடி இருந்தனர். ஆனால் யாராலும் அந்த கிறுக்குத்தனமான செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அது நிச்சலனமான இதயத்திலிருந்து, தெளிவான கண்ணோட்டத்திலிருந்து வந்தது. அதே போல தெளிவான கண்ணோட்டம் கொண்ட மனிதனால் மட்டுமே அதை புரிந்து கொள்ள முடியும்.

மனீஷா,  யார் தங்களது நிச்சலனத்தில் நுழைந்து விட்டார்களோ அவர்களால் மட்டுமே மற்ற நிச்சலனமான  இதயத்தை புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு அது ஒரு புதிராக, கிறுக்காக, மடத்தனமாக தோன்றும். பல் வேறு விதமான அழகான புத்தர்கள் இருக்கின்றனர். அவர்களது செயல்கள் அவர்களது நிச்சலனமான இதயத்துடன் இணைந்ததாக இலயத்துடன் இருக்கின்றன. வேறு எதை பற்றியும் அக்கறை இல்லை. அதை அறிவாளித்தனத்தினால் புரிந்து கொள்ள முடியாது. அதை பொதுவான மக்கள் புரிந்து கொள்வது கடினம்.

License

Share This Book